"கலைஞர் எனும் தாய்" நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் பேச்சு குறித்து ரவிக்குமார் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என இன்று அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொவார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதைப் பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்..