தமிழகத்தில் இன்று (ஜன.13) காலை 10 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவை விட அதிகமாக பெய்திருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகுத்தில் வரும் 18 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.