தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.