மகன் வீட்டில் ரெய்டு... அமைச்சர் துரைமுருகன் தீவிர ஆலோசனை

73பார்த்தது
மகன் வீட்டில் ரெய்டு... அமைச்சர் துரைமுருகன் தீவிர ஆலோசனை
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி.,யுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமாக காட்பாடியில் உள்ள வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறையினர் சோதனை செய்ய வந்தனர். ஆனால் எம்.பி., வெளிநாடு சென்ற நிலையில் வீடு பூட்டப்பட்டிருப்பதால் கடந்த 2 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே காத்துள்ளனர். இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தல் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனிடையே கதிர் ஆனந்தின் வீட்டின் முன் திமுகவினர் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி