சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின் தற்போது 4வது என்கவுண்டர் நடந்துள்ளது. பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா உள்ளிட்டோர் கடந்தாண்டில் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாஃபர் குலாம் என்பரை போலீசார் இன்று என்கவுண்டர் செய்துள்ளனர். திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த திருவான்மியூர் ஆய்வாளர் முகமது புகாரியே, ஜாஃபரையும் என்கவுண்டர் செய்துள்ளார்.