தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக இருப்பவர் வடிவேலு. இந்நிலையில் தனது தாயாரின் இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை கடற்கரைக்கு வந்து தாயாருக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த வடிவேலு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக தாயாரின் நினைவுகளை சுமந்துகொண்டு கண்ணீருடன் கடலில் நீராடினார்.