தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஜய் (21) என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் சென்றார். அவர்கள், பட்டாசு வெடிப்பதற்கான உபகரணங்களுடன் ஹுசைன் சாகர் ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில், அஜய்யின் நண்பர்கள் பத்திரமாக உயிர் தப்பினர். இதில், அஜய் மட்டும் மாயமானார். இரவு முதல் அஜய் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் என வருவதால் குடும்பத்தினர் வேதனையடைந்துள்ளனர்.