221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்ற திமுக கூட்டணி

76பார்த்தது
221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்ற திமுக கூட்டணி
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில், திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. தென் சென்னை உள்ளிட்ட 32 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 192 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணியே அதிக வாக்குகளை பெற்றுள்ளது.‌ அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 8 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி