தேனி மாவட்டம் வடகரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் திலகர் (70) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று (செப். 25) இரவு அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மற்றும் சிறுமிக்கு இனிப்பு கொடுத்து தனியே அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் போலீசில் அளித்த புகாரின் பேரில் திலகர் கைது செய்யப்பட்டார்.