புதுக்கோட்டை: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் மாநில அளவிலான சமுதாய பண்ணை பள்ளி கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையத்தில் (தனுவாஸ்) நடந்தது. மையத் தின் தலைவர் புவராஜன் தலைமை வகித்து கோழி வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். சென்னை வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாநில விவசாய ஆலோசகர் திலகவதி முன் னிலை வகித்தார். மாவட்ட செயல் அலுவலர் செல் வம் சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் அஷீபா கோழி மற்றும் ஆடுகளை நோய் தாக்காமல் தடுக்கும் முறைகள், தடுப்பூசிகள் குறித்து விளக்கினார். குறை வான செலவில் அசோலா தீவன உற்பத்தி மற்றும் சிறந்த கோழி மற்றும் ஆடுகள் தேர்வு குறித்து எடுத் துரைக்கப்பட்டது.
கற்றுணர்வு பயணமாக கால்நடை மருத்துவ கல்லுாரி பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி யில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்று னர்கள் பங்கேற்றனர்.