அன்னவாசலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

63பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அன்னவாசல் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த சேட்முகமது (52) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி