பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழிஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு பால், தயிர், இளநீர், சந் தனம், பஞ்சாமிர்தம் என்று 16 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபி ஷேகங்களை வைரவக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.
இதேபோல் அழகிய நாச்சியம்மன் கோயிலிலும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.