இலுப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான புனித அந்தோணியார் ஆலய பெருவிழா ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும். இதனையொட்டி வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி வாண வேடிக்கையுடன் பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெற்று வருகின்றது.