ஜல்லிக்கட்டு காளையுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு!

75பார்த்தது
தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருமயம் சட்டமன்றத் தொகுதி விராச்சிலை கிராமத்தில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவர் வடமாடு ஜல்லிக்கட்டு காலுடன் வந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்பு அளித்தனர் பின்னல் அவர் பேசுகையில் உதய மரம் நிலைக்கு பயன்படாது அதுபோல முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எதற்கும் லாயக்கில்லை அவரது மகன் வெற்றி பெற்று இதுவரை இந்த பகுதிக்கு எதுமே செய்யவில்லை மேலும் திமுக அரசு அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களை தடுத்துவிட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைத்து உடனே திமுக அரசால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் உங்கள் கவலைகள் தீரும் ஆகவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி வாக்கு சேகரித்தார். முன்னதாக விராச்சிலை கிராமத்திற்கு வருகை புரிந்த சிவகங்கை அதிமுக வெற்றி வேட்பாளர் சேவியர் தாசுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான P. K. வைரமுத்து பொன்னாடை போற்றி மலர் சென்டு கொடுத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி