புதுகை அரசு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுமி மீட்பு!

81பார்த்தது
புதுகை அரசு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுமி மீட்பு!
புதுக்கோட்டை நரிமேடு அரசு இல்லத்தில் இருந்து தப்பியோடிய 3 சிறுமிகளில் இருவர் ஏற்கெனவே மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு சிறுமியும் திங்கள்கிழமை மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை நரிமேட்டிலுள்ள அன்னை சத்யா நினைவு அரசு இல்லத்தில் இருந்து குற்ற வழக்கில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டிருந்த 3 சிறுமிகள் கடந்த மாதம் தப்பியோடினர். இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு அச்சிறுமிகளை திருக்கோகர்ணம் போலீஸார் தேடி வந்தனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, திருச்சி மற்றும் மதுரையில்
மீட்கப்பட்டு, மீண்டும் இல்லத்தில்
சேர்க்கப்பட்டனர். இந்நிலையில்
மற்றொரு சிறுமியையும்
சென்னையிலிருந்து போலீஸார்
மீட்டு வந்து திங்கள்கிழமை மீண்டும்
இல்லத்தில் சேர்த்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி