தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு!

51பார்த்தது
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு!
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதில் புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் கேலரி, தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக வாடிவாசல் அமைக்குமாறு உத்தரவிட்டார். டிஆர்ஓ செல்வி, ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் ராமசாமி, கந்தர்வகோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்தி, ஊராட்சி தலைவர் ராணி ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி