புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் கே. கே நகரை சேர்ந்தவர் பாலகண்ணன். இவரது மனைவி கனிமொழி (27). இந்த தம்பதியினருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஆக. 11ம் தேதி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனைக் கண்ட குடும்பத்தினர் கனிமொழியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கனிமொழி நேற்று ஆக. 17 சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.