பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரூ.1.25 கோடி சுருட்டியவர் கைது!

2605பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த முகமது பயாஸ்(42 வயது). இவரிடம் முகமது சுகைல் என்பவர் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 85 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை வாங்கித் தரவில்லை, இதனால் ஏமாற்றம் அடைந்த முகமது பயாஸ் பணத்தை திருப்பிக் கேட்ட பொழுது தன்னிடம் இப்போது பணம் இல்லை, மேலும் ரூ. 50 லட்சம் வழங்கினால் ஏல சீட்டில் பணம் வந்ததும் திருப்பித் தருவதாக கூறியிருந்தார்.

இதனை நம்பி முகம்மது பாயாசும் ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார். இதன்பின் ரூ. 10 லட்சத்தை மட்டும் முகம்மது சுகைல் திருப்பி அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது பயாஸ் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசீர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான முகமது சுகைலை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பொங்கல் தொகுப்பு அரசின் அனுமதியை பெற்றதாக கூறி முகமது பயாசை ஏமாற்றியதோடு இதே போல் தமிழகத்தில் பல பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி முகமது சுகைல் மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து தற்பொழுது சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி