தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகில் கதாநாயகர்கள் மட்டுமே பல வருடங்கள் நீடித்து நிலைக்க முடியும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் அவர். தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் கதாநாயகியாக கலக்கி வருகிறார். அழகு மட்டுமின்றி தனது திறமையான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர். கில்லி ‘தனலட்சுமி’, பொன்னியின் செல்வன் ‘குந்தவை’ போன்ற காலத்தால் அழியாத கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.