பெண்ணை கண்டுபிடித்து தர கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்!

82பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கல்லாலக்கோட்டை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக 21 வயது நிரம்பிய கார்த்திகா இவரை வீட்டில் விட்டுவிட்டு அவரது தாய் வேலைக்கு சென்று விட்டார் வேலை முடித்து வந்து வீட்டில் பார்க்கும் பொழுது கார்த்திகா வீட்டில் இல்லை உடனே அக்கம் பக்கம் விசாரித்துள்ளனர் அவர்களும் கார்த்திகா இங்கு வரவில்லை என கூறியுள்ளார் உடனே மறுநாள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர் ஆனால் புகார் மனு அளித்தும் மூன்று நாட்களாகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் காவல் நிலைய முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர் உடனே காவல்துறையினர் நாளை காலை 10 மணிக்கு உங்கள் மகளை கண்டுபிடித்து ஒப்படைத்து விடுகிறோம் எனக் கூறியும் ஐந்து தடைப்படைகள் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளனர். அதை நம்பி சென்ற பொது மக்களுக்கு இதுவரை எந்தவித தகவலும் அளிக்க மறுத்துவிட்டனர் இதை அடுத்து அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியை சந்தித்து மனுஅளித்தனர் அந்த மனுவில் காணாமல் போன இளம் பெண்ணை உடனே கண்டுபிடித்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி