புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவ மழை தொடங்கிய நாளிலேயே கன மழை பெய்து வருவதால் இந்த வருடம் அதிக மழை பெய்யும் என்று அப்பகுதி விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் மானாவாரி பயிர்களை மழையை பார்த்து பயிரிடலாம் என முடிவு செய்துள்ளனர்.