தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்த கனமழையால், அஞ்சுகிராமம் - கன்னியாகுமரி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை காலை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.