புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒரு நகைக்கடை இயங்கி வருகிறது. அந்த கடைக்குள் ஆட்கள் இருக்கும்போதே முகமூடி அணிந்துகொண்டு சிலர் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து, கடையின் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மாமூல் கேட்டு மிரட்டிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.