ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம்!

60பார்த்தது
திருவரங்குளம்: திருவரங்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திரு விழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கே அம்பாள் சன்னதி முன்பு உள்ள 31 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி யேற்றினர். நிகழ்ச்சியில் கோயில் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 6ம் தேதி காலை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி