புதுக்கோட்டை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காமாட்சி அம்மன் கோயில் பஸ் நிறுத்தம் அருகே புதுக்கோட்டை உதவி கூட்டுறவு அலுவலர் பூங்காவனம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, ரூ. 75 ஆயிரத்து 880 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கார் டிரைவர் மேல்நிலைப்பட்டியை சேர்ந்த செல்வத்திடம் விசாரித்தபோது, அந்த கார் அரிமளம் ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருமயம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.