
’சின்ன கலைவாணர்’ விவேக் நினைவு நாள் இன்று
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மகத்தான திரைக்கலைஞன் விவேக்கின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஏப். 17) அனுசரிக்கப்படுகிறது. சினிமா மட்டுமின்றி சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் கொண்ட விவேக் ஒரு கோடி மரங்களை நட்டுவிட வேண்டும் என்ற இலக்கைத் தன் கடைசி மூச்சு வரை மேற்கொண்டார். அனைவராலும் கொண்டாடப்பட்ட விவேக் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்தார்.