24 ஆம் ஆண்டு நாடாளுமன்ற
தேர்தலுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஊடக, சமூக ஊடக பிரிவின் ஒருநாள் பயிற்சி முகாம் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில், மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்திலும் புதுச்சேரியிலும்,
அதிக்கப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். மீண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே பிரதமர் ஆக அனைவரும் பாடுபடவேண்டும் என பேசினார்.