ரூ. 33 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

67பார்த்தது
புதுச்சேரி வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பெருமாள்புரம் – குறுக்குத் தெருக்களுக்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ. 32, 60, 000 மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் பக்கவாட்டு கழிநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவா கலந்துகொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா, ஊர் முக்கியஸ்தர்கள் திலகர், செந்தமிழ் செல்வன், தயாளன், சுப்பிரமணி, ரஞ்சித், திருமுருகன், திரு குமரேசன், சுந்தரராசு, சுதர்சன், பன்னீர்செல்வம், சிவக்குமார், செந்தில் வேலன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், தொமுச பேரவைத் தலைவர் அங்காளன், அயலக அணி தலைவர் தாஹா, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி