புதுச்சேரி கடற்கரையில் மகாளய அமாவாசை திதி கொடுத்த மக்கள்

74பார்த்தது
மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு (கடலுக்கு) சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது என ஐதீகம் ஆகும்.
இதன் படி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை, வேதபுரீஸ்வரர் கோயில் குளக்கரை, முத்தியால்பேட்டையில் உள்ள செங்குந்தர் மரபினர் பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
அதே போல் வில்லியனூர் அடுத்த பழமையான திருக்காஞ்சி கெங்கவராகநதீஸ்வரர் கோயில் அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி