1000-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பேரணி ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாடகை டூவீலர் மற்றும் இ-பைக் திட்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், தீபாவளி உதவித்தொகை 4000 ரூபாய் வழங்கிட வேண்டும், ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஸ்பாட் ஃபைன் அபராத முறையை கைவிட வேண்டும் என புதுச்சேரி அரசை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களும் இன்று (அக் 1) ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் காக்கிசட்டை அணிந்து முக்கிய வீதிகளின் வழியாக ஆட்டோக்களுடன் பேரணியாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். சட்டமன்றம் அருகே சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆட்டோ தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி