கொம்பாக்கத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

55பார்த்தது
கொம்பாக்கத்தில் ரூ. 2 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கொம்பாக்கம் வார்டில் கோதண்டபாணி நகர், யோகவா நகர், ஈஸ்வர் நகர் பகுதிகளுக்கு புதுச்சேரி நகாரட்சி மூலம் ரூ. 19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி, செட்டிக்களம், துர்கா நகர் பகுதியில் ரூ. 17 லட்சம் மதிப்பில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி, பாப்பாஞ்சாவடி சப்தகிரி கார்டன் பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, மின்துறை மூலம் ரூ. 23 லட்சம் செலவில் செட்டிக்களம் மற்றும் கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் பணி மற்றும் கொம்பாக்கம் அய்யனார் கோவில் முதல் செட்டிக்களம் ரோடு கடைசி வரை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு மூலம் ரூ. 1 கோடியே 40 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 2 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, தார்ச்சாலை அமைக்கும் பணி, மின்மாற்றி இயக்கி வைக்கும் பணி மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you