தங்கமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

67பார்த்தது
தங்கமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
காரைக்கால் அடுத்த தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ தங்கமாரியம்மன் ஆலயத்தில் ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு நேற்று இரவு மகாலட்சுமி பூஜை என்றழைக்கப்படும் திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று குத்து விளக்கை அம்மனாக பாவித்து குங்குமம், பூக்கள் கொண்டு பூஜித்து வழிப்பட்டனர். முன்னதாக ஸ்ரீ தங்கமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி