பள்ளி மாணவர்கள் கணிதத் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி

74பார்த்தது
பள்ளி மாணவர்கள் கணிதத் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி
காரைக்கால் மாவட்டம் மேலகாசாகுடி அரசு நடுநிலைப்பள்ளியில் கணிதத் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது. இதனை பள்ளித் தலைமையாசிரியர் பரமசிவம் தலைமை வகித்தார். பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ், பல்வேறு உபகரணங்களைக் கொண்டு கணித அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக பயிற்சி அளித்தார். தொடக்கப்பள்ளி மாணவர்கள், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் என அனைத்து வகுப்பினருக்கும் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி