புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு - குற்றவாளி தற்கொலை முயற்சி

130705பார்த்தது
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு - குற்றவாளி தற்கொலை முயற்சி
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் (59) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் விவேகானந்தன், கருணாஸ் என இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டை மூலம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக கைதி கருணாஸ் சத்தம் போட்டதை அடுத்து, போலீசார் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி