10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் பிப்.14 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தத்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பிப்.14 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.