மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல்?

69600பார்த்தது
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல்?
மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் டெல்லி திரும்பிய பின்னரே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பு மார்ச் 10ஆம் தேதியே வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி