திருடன் மீது மோதிய பேருந்து.. ஷாக் வீடியோ

81பார்த்தது
பிரேசிலின் சாவ் பாலோ நகரில் சமீபத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்தது. 71 வயது முதியவர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு திருடன் அவரது போனை திருடிக்கொண்டு ஓடினான். அப்போது அந்த வழியாக வந்த பேருந்து திருடன் மீது மோதியது. இதனால், திருடன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி