பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

71பார்த்தது
பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் அவர் இன்று கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடை பயணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இன்று பீகாரை கடக்கும் ராகுல் காந்தியின் பயணம் நாளை உத்தரப் பிரதேச மாநிலத்தை அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி