ஏப்.9ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை

57பார்த்தது
ஏப்.9ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை
தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 9ஆம் தேதியன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தென் சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் சென்னையின் 3 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். சென்னை பாண்டி பஜார் பகுதியில் பிரதமர் வாகன பேரணியிலும் பங்கேற்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வரும் 5ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

தொடர்புடைய செய்தி