பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவின் திருச்சூரில்
பாஜக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கான பாராட்டு கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். திருச்சூர் வடக்குநாத கோவில் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இரண்டு லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என
பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. பொதுக்கூட்ட அரங்கில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதியம் இரண்டு மணிக்கு திருச்சூர் குட்டாநெல்லூர் அரசு கல்லூரி ஹெலிபேடில் மோடி இறங்குகிறார். பின்னர், மோடியின் வாகன பேரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்குகிறது. இதனையொட்டி, திருச்சூர் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.