கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கூறியதாவது, “சமீபத்தில் கேரளாவில் நடந்த நிலச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவாக ரூ.25 லட்சத்தை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன். கேரளா எப்பொழுதுமே எனக்கு மிகுந்த அன்பைக் கொடுத்துள்ளது. வயநாடு மக்களின் பாதுகாப்பு மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.