ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்பு!

62849பார்த்தது
ஜப்பானில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 90 நிமிடத்தில் 30 முறை நிலம் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி