விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

69பார்த்தது
விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு
விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜுலை 26) நடந்த சந்திப்பின் போது, மீனவர் நல மாநாடு நடத்தி மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக நன்றி தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்டுத் தரவும் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி