முறைகேடு செய்து ஐஏஎஸ் தேர்வெழுதியது நிரூபணமாகியுள்ளதால், பயிற்சி அதிகாரியாக இருந்த, பூஜா கெட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது யு.பி.எஸ்.சி. மேலும், இனி அவர் யுபிஎஸ்சி தேர்வெழுத முடியாதபடி வாழ்நாள் தடையும் விதித்துள்ளது. தேர்வெழுத அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் முறை தேர்வெழுதி அவர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதற்காக தனது பெயர், பெற்றோரின் பெயரை மாற்றி ஆவணங்களை சமர்ப்பித்ததும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக யு.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.