பிரதமர் மோடி இன்று சென்னை வருகை - உச்சகட்ட பாதுகாப்பு

60பார்த்தது
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை - உச்சகட்ட பாதுகாப்பு
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கு வரும் பிரதமர், கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மாலை நடைபெறவுள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகிறது. தமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி