இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்

65பார்த்தது
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்
இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா என காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார். எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு அதை மத நம்பிக்கையில் வழங்க மாட்டோம் என எழுதி தர முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு இட ஒதுக்கீடு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என எழுதித் தர முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி