பூலான் தேவி வழக்கு- 43 ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பு

1070பார்த்தது
பூலான் தேவி வழக்கு- 43 ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பு
உத்தர பிரதேச மாநிலம், பெஹ்மாய் என்ற கிராமத்தில் கடந்த 1981ஆம் ஆண்டு நடந்த மோதலில் பூலான் தேவியின் கும்பல் 20 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது. பூலான் தேவி உள்பட மொத்தம் 35 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் சியாம் பாபு, விஸ்வநாத் ஆகியோர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று 43 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில், சியாம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விஸ்வநாத் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி