106வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

66பார்த்தது
106வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை இன்று (ஜூலை 01) 106வது நாளாக மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. அதே போல் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 82.73 அமெரிக்க டாலரில் விற்கப்படுகிறது.

அதே போல், சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை இன்று குறைந்த நிலையில் ரூ.1,809.50க்கு விற்பனை செய்யப்படுகிறது, முன்னதாக ரூ.1,840.50-க்கு விற்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி