மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் பிப். 14ஆம் தேதி 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் நாகவல்லி ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட அனைத்து போலீசாரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.