ஸ்ரீசண்டி மகா ஹோமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சி

79பார்த்தது
சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு நடந்த ஸ்ரீசண்டி மகா ஹோமம் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குங்குமஅர்ச்சனை செய்து பூஜை வழிபாடு செய்தனர்.
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற ஸ்ரீமதுரகாளிஅம்மன் கோவிலில் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 14-வது சித்திரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமம் நடந்தது.
இதில் யாகசாலை முன்பு கும்பகலசங்கள் வைக்கப்பட்டு, ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் முன்னிலையில் கும்பபூஜைகள் நடந்தன. இதில் மகாமேரூ மண்டலியின் ஆன்மீக மெய்யன்பர்கள் பக்தர்கள் குழுவினர் கலந்துகொண்டு கும்பபூஜைகளையும், சிவாச்சாரியார்கள் ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தையும் நடத்திவைத்தனர்.
மேலும் ஸ்ரீநவாவரணபூஜையும், நவாவரண ஹோமமும், மதியம் 1மணிவரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அர்ச்சனையும் நடந்தது. இதில் பல நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி